சேங்காலிபுரம் தத்தாத்ரேயர் கோவில் | கார்த்தயவீரிய எந்திரத்தை வழிபட திருடு போன பொருட்கள் கிடைக்கும்

Описание к видео சேங்காலிபுரம் தத்தாத்ரேயர் கோவில் | கார்த்தயவீரிய எந்திரத்தை வழிபட திருடு போன பொருட்கள் கிடைக்கும்

DATTA KUTEERAM, SENGALIPURAM
சேங்காலிபுரம் ஸ்ரீ தத்த குடீரம்
ஸ்ரீ தத்தாத்திரேயர் ஆலயம்

மூலவர்: தத்தாத்திரேயர்
ஊர்: சேங்காலிபுரம்
மாவட்டம்: திருவாரூர்

தலசிறப்பு

பரபிரும்மனான ஸ்ரீ ததத்தாத்திரேயரின் மகிமையை உணர்ந்த, சேங்காலிபுரத்தில் பிறந்த மகான் ஸ்ரீ ரமனானந்த ஸ்வாமிகள் என்பவர் காசிக்கு சென்று அங்கு தங்கி இருந்த 120 வயதான மாபெரும் முனிவர் படகு ஸ்வாமிகள் என்பவரை சந்தித்து அவரிடமிருந்து மகா மந்திர தீட்சையைப் பெற்றார். தீட்ஷை பெற்று திரும்பக் கிளம்பியவரிடம், தென் இந்தியாவில் ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு படகு ஸ்வாமிகள் கூறினார். இதனால் சேங்காலிபுரத்திற்கு திரும்பிய ஸ்ரீ ரமனானந்த ஸ்வாமிகள் முதலில் சேங்காலிபுரம் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் ஸ்ரீ தத்த ஜெயந்தியை கொண்டாடிய பின்னர், மெல்ல மெல்ல ஆலயம் அமைக்க யோஜனை செய்திருந்தபோது, ஒருமுறை ஸ்ரீ தத்தாத்திரேயரும் அவரது கனவில் தோன்றி, பிரஹலதா புஷ்கரணி என்ற பெயரிடப்பட்ட குளத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் தனக்கு ஒரு ஆலயத்தை அமைக்குமாறு கூறியதால் சற்றும் தாமதிக்காமல் குரு மற்றும் ஸ்ரீ தத்தாத்திரேயரின் கட்டளைப்படி சேங்காலிபுரத்தில் ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு ஒரு ஆலயத்தை அமைத்து அதற்கு ஸ்ரீ தத்தா குடில் எனப் பெயரிட்டார். ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு நிறுவிய ஆலயத்தில் 1008 பீஜ மந்திர அட்ஷரங்கள் கொண்ட ஸ்ரீ தத்தாத்திரேயர் யந்திரம், மற்றும் ஸ்ரீ கர்த்தவீர்யாஜுனரின் யந்திரத்தையும் முறைப்படி ஆவாஹனம் செய்து பிரதிஷ்டை செய்தார். இப்படிப்பட்ட யந்திரங்கள் வேறு எந்த ஸ்ரீ தத்தாத்திரேயர் ஆலயத்திலும் கிடையாது என்பது இந்த ஆலயத்தின் மகிமைக்கு ஒரு சான்றாகும்.

பிராத்தனை

ஸ்ரீ தத்தாத்திரேயர் வழிபாட்டிற்கான புனிதமான, தெய்வீக மற்றும் ஆற்றல் மிக்க ஸ்ரீ தத்தாத்திரேய யந்திரம் என்பது என்ன? அதை வழிபடுவதால் ஒருவர் பெறும் நன்மைகள் என்ன? இந்த ஆலயத்தில் இந்த யந்திரத்தை வழிபடும்போது:

எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் அச்சங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்
தன்னம்பிக்கை, ஞானம் மற்றும் அறிவாற்றல் பெருகும்
நியாயமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்
வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் இடையே நல்லிணக்கம் நிலவும்
முன்னோர் சாபங்கள் விலகும்
செய்வினை, கண்திருஷ்டி போன்றவை அழியும்
வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் விலகும்
ஸ்ரீ தத்தாத்ரேயரின் ஆசி கிடைக்கும்
அதை போலவேதான் ஸ்ரீ கார்த்தவீரியன் யந்திரம் என்றால் என்ன, அதை வழிபடுவதால் ஒருவர் பெறும் நன்மைகள் என்ன?

கார்த்தவீரியன்

ஸ்ரீ கார்த்தவீரியன் யார் என்பதை பற்றி முதலில் சிறு அளவில் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர் ஹேஹாய வம்ச மன்னர் கிருதவீர்யாவின் மகன். முன் பிறவியில் ஸ்ரீ விஷ்ணுவின் கைகளை அலங்கரித்தபடி இருந்த ஆயிரம் இரும்புத் கம்பிகளை கொண்ட சுதர்சன சக்கரமாக இருந்தவர். ஸ்ரீ விஷ்ணுவின் சாபத்தினால் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனனாக பிறப்பு எடுத்து ஸ்ரீ தத்தாத்திரேயரின் சிறந்த பக்தர் ஆனவர். ஒருமுறை ஸ்ரீ விஷ்ணு பகவான் தூங்கிக் கொண்டிருந்தபோது, சுதர்சன சக்கரம் பகவானின் சங்குடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அசுரர்களுடன் போர் புரிந்த போது ஸ்ரீ விஷ்ணு பகவானின் வெற்றிக்கு தானே காரணம் என்பது போலவும், பகவானின் கைகளில் உள்ள சங்கினால் சத்தமிட மட்டுமே முடியும், வேறு எந்த வகையிலும் இறைவனுக்கு உதவ முடியாது என்றும் சுதர்சன சக்கரம் கூற பகவான் உறங்குவது போல இருந்தாலும் அவர்களது உரையாடலைக் கேட்டவர் கோபம் கொண்டு அடுத்த பிறவியில் அந்த சுதர்சன சக்கரம் முடமாக பிறந்து, அவமானப்படுத்தப்படுவார், சில காலத்தில் சுதர்சன சக்கரத்தைப் போன்ற பலத்தை மீண்டும் அடைந்து ஆயிரம் கைகளைப் பெற்றாலும், அதே பிறப்பில் தன்னால் மரணம் அடைவார் என சாபமிட்டார். அதனால்தான் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் முடமாக பிறந்து ஸ்ரீ விஷ்ணு பகவானின் அம்சத்தை உள்ளடக்கி இருந்த ஸ்ரீ தத்தாத்திரேயரின் சீடனாக மாறி, அவருடைய அருளால் ஆயிரம் கைகளைப் பெற்று, பலமிக்கமவனாக ஆனாலும் மீண்டும் ஸ்ரீ விஷ்ணு பகவானின் அம்சமாக இருந்த பரசுராமரின் கைகளில் மரணத்தை சந்தித்தார். அந்த நாடகத்தையும் ஸ்ரீ தத்தாத்ரேயரே நடத்தி முடித்தார். மரணம் அடைந்த ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் கலந்து மீண்டும் சுதர்சன சக்கரமாக மாறி பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு சேவை செய்யச் சென்றார்.
ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் மரண வாயிலில் இருக்கையில் ஸ்ரீ தத்தாத்திரேயர் அவர் முன் தோன்றி ‘அவர் கடவுளுடன் இருந்த நிலையை இழந்து மீண்டும் அதே நிலையை எப்படி அடைந்தாரோ’ அதை போலவேதான் பக்தர்கள் ‘தாம் இழந்த பொருள், பெருமை, சொத்துக்கள் மற்றும் அதை போன்றவற்றை மீண்டும் அடைய வேண்டும்’ என்பதற்காக தன் ஆலயத்தில் வந்து ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனாவிற்கு வழிபாடு செய்து அவருடைய மந்திரத்தை உச்சரித்தால், இழந்த அனைத்தையும்- ‘பொன், பொருள், புகழ், உறவினர்கள் என அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள்’ என வரம் அளித்து கௌரவித்தார். அந்த வரம் உண்மையில் சுதர்சன சக்கரத்திற்கு ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனாவின் பெயரால் கிடைத்தது ஆகும்.

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சேங்காலிபுரம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து குடவாசல் வழியாக சேங்காலிபுரம் வர பேருந்து வசதி உள்ளது. குடவாசலில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்

+91 9487292481

+91 9488467100

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

+91 7994347966

கோயில் Google map link

https://maps.app.goo.gl/NaY7UkACJ4YER...

if you want to support us via Google pay phone pay paytm

9655896987

Join this channel to get access to perks:

   / @mathina  

- தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке