சனீஸ்வரர் பிடியிலிருந்து விடுபட வேண்டுமா? அகத்தியர் கூறும் எளிய வழிமுறை | Shani Dosham in Tamil

Описание к видео சனீஸ்வரர் பிடியிலிருந்து விடுபட வேண்டுமா? அகத்தியர் கூறும் எளிய வழிமுறை | Shani Dosham in Tamil

Watch Shani Dosha Pariharam in Tamil by Agatiyar Siddhar. By chanting this mantra 128 times for 48 days after taking bath in early morning,facing the East direction will relieve the Shani Dosham

Mantra to Chant : OM GILI SIVA

மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக் கிரகங்களின் பார்வை (கதிர் வீச்சு) ஒரு காரணம் என ஜோதிட சாஸ்த்திரம் வலியுறுத்துகின்றது.

சனி தோஷம் - பிடியிலிருந்து விலக அகத்திய பெருமான் கூறும் வழிமுறை பாடல் விளக்கம்.

கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில்
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே
தானேறி நின்றுகொண்டு தலைகால் வேறாய்
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல்
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி

கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று
கரையேற வொட்டாமல் கருதுவானே
கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி
சுருதிபொரு ளானதொரு நாதன்பாதம்
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு

பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து
பாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில்
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும்
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்

இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி,பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார். நீரில் பாசம் போல் படிந்து நின்றது போல் நம் மேல் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின் பாதம் தொழுது ஒரு உபாயம் கூறுகிறேன் .

அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி "ஓம் கிலி சிவ" என்ற மந்திரத்தை -128-முறை செபிக்கவும்.இப்படி ஒரு மண்டலம் - 48-நாட்கள் தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும்.இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறை.

ஒருமுறை திருநள்ளாறு / திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம் /குச்சனூர் சனீஸ்வரன் கோயில் சென்று வரலாம்.

Комментарии

Информация по комментариям в разработке