கல்வியில் சிறந்து விளங்க மந்திரம் -அபிராமி அந்தாதி | Kalviyil Sirakka | Thervil Vetri Pera Manthiram

Описание к видео கல்வியில் சிறந்து விளங்க மந்திரம் -அபிராமி அந்தாதி | Kalviyil Sirakka | Thervil Vetri Pera Manthiram

Kalviyil Sirakka(Thervil Vetri Pera Manthiram) Abirami Anthathi - Abirami Anthathi Meaning in Tamil - Abirami Anthathi Lyrics in Tamil - Abirami Anthathi Miracles - Abirami Anthathi Benefits

அபிராமி அந்தாதி பாராயணம்:

அபிராமி அந்தாதியில் உள்ள நூறு பாடல்களையும் தினம்தோறும் பாடுவது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். அதனால் நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை 101வது பாடலாக வரும் நூல் பயன் என்ற ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம்.

காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 4.30 to 6.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாடி வழிபடலாம்.

முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அபிராமி அம்மாவை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.

அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்:

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.

அபிராமி அந்தாதி பாடல் பொருள்:

எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர்.

படிக்கும் குழந்தைகள் இந்த பதிகங்களை தாங்களே தினமும் பாராயணம் செய்து வந்தால் மிகவும் நல்லது, இல்லை என்றால் பெற்றோர்கள் கூட இதை தங்கள் குழந்தைகளுக்காக தினமும் பாராயணம் செய்யலாம். பெற்றோர்கள் ஒரு சொம்பில் சுத்தமான நீரை மனதார அம்மாவை வேண்டி கொண்டு இடது உள்ளம்கையில் அந்த சொம்பை வைத்து கொண்டு வலது கையால் சொம்பை மூடி கொண்டு 101, 1, 9, மற்றும் 69 ம் பதிகங்கள் ஒவ்வொன்றையும் 3 முறை பாராயணம் செய்ய வேண்டும், செய்து முடித்த'பின்னர் அந்த சொம்பில் உள்ள நீரை படிக்கும் குழந்தைகளுக்கு தீர்த்தமாக கொடுக்கலாம்.

1. ஞானமும் நல்வித்தையும் பெற - அபிராமி அந்தாதி 1 வது பாடல்

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.

அபிராமி அந்தாதி பாடல் பொருள்:

காரிருளை அகற்றவல்ல செங்கதிரோனின் கதிர்களைப் போன்று உள்ளது அபிராமி அன்னை தன் தலை வகிட்டில் அணிந்திருக்கும் திலகம். ஞானத்தில் சிறந்தவர்களால் போற்றப்படும் மாணிக்கம் போன்றவள் என் அன்னை அபிராமி. மாதுளை மொட்டின் நிறங்கொண்ட கமலத்தின் மீது வீற்றிருந்து அருள்புரியும் திருமகளால் போற்றப்படும் மின்னல் கொடியினைப் போன்றவள் என் அன்னை அபிராமி.
மெல்லிய மணம் கமழும் குங்குமம் கரைத்த நீரைப்போன்ற மேனியினைக் கொண்ட அன்னை அபிராமியே எனக்கு சிறந்த துணையாவாள்.

அன்பர்கள் தினந்தோறும் இத்திருப்பாடலை 3 முறை ஓதினால் எப்படி கதிரவன் உலகத்து இருள் நீக்கி இன்பந்தருகின்றானோ. அதே போல் அபிராமி அன்னை நம் மனவிருளை நீக்கி அறிவையும், ஞானத்தையும், ஆற்றலையும் நம் வாழ்விற்கு ஒளியையும் தந்திடுவாள்.

குழந்தைகள் கல்வி, அறிவு, ஞானம் பெற | தேர்வுகளில் வெற்றி பெற

2. குழந்தைகள் கல்வி, அறிவு, ஞானம் பெற - அபிராமி அந்தாதி 9 வது பாடல்

கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்தென் முன்னிற்கவே.

அபிராமி அந்தாதி பாடல் பொருள்:

கருப்பு நிறம் கொண்டு எமது தந்தையாம் சிவபெருமானின் கண்ணிலும் கருத்திலும் என்றும் நீங்காமல் நிற்பனவும், வண்ணம் நிறைந்த பொன்மலையான மேருமலையைவிட பெரிதானதும், உயிர்களுக்கு எல்லாம் நீ தாய் என்பதைக் காட்டுவது போல் தாயைச்சிறிது நேரம் பிரிந்து அழுத திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலை வழங்கியதுமான, இப்படிப் பெரும் கருணை கொண்ட உன் கனமான திருத்தனங்களுடனும், அதில் பொருந்தி நிற்கும் மாலைகளுடனும் உன் சிவந்த திருக்கரங்களில் ஏந்திய வில்லுடனும் அம்புடனும், பூவின் மொட்டு அவிழ்வதைப் போல் இருக்கும் உன் அழகியபுன்னகையுடனும் என் தாயே நீ என் முன்னே வந்து காட்சி தர வேண்டும்.

அன்பர்கள் தினந்தோறும் இத்திருப்பாடலை 3 முறை ஓதினால் குழந்தைகளின் கல்வி, அறிவு, ஞானம் மேம்பட்டு தேர்வுகளில் பயம் மற்றும் பதட்டமின்றி நன்கு எழுதி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.

3. சகல சௌபாக்கியங்களும் அடைய - அபிராமி அந்தாதி 69 வது பாடல்

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

அபிராமி அந்தாதி பாடல் பொருள்:

இப்பாடலில் அபிராமி பட்டர் அம்பாளின் கடைக்கண்கள் தரக்கூடிய நன்மைகளை பற்றி கூறுகிறார். எல்லாவித செல்வங்கள், கல்வி, திட மனது, தெய்வீக வடிவு, வஞ்சமில்லாச் சுற்றம், நல்லன எல்லாம்

கார்மேகம் போல், கருமையான, கனமான கூந்தலினை கொண்ட அபிராமி அம்மையின் கடைக்கண்கள் கடைக்கண் பார்வை நம் மீது பட்டாலே கிடைத்து விடும். அன்னையை வேண்டித் தொழுது அவள்

சிறிதளவு தன் திருக்கண்களைத் திறந்து நம்மைப் பார்த்தால், மேற்சொன்ன எல்லாம் கிடைத்து விடும். அன்னையிடத்து அளவற்ற அன்பு பூண்டுள்ள அடியவர்களுக்கு மட்டுமே நற்பெருமையானது கிட்டும்.

மிகச்சிறந்த பாடல் இது. நம்மில் பலர் பள்ளி நாட்களில் இதை மனப்பாடச் செய்யுளாகக் கட்டாயம் கற்றிருப்போம். அன்பர்கள் தினந்தோறும் இத்திருப்பாடலை 3 முறை ஓதினால் சகல பாக்கியங்களையும் பெறலாம்.

#aalayamselveer #abiramianthathi #kalviyilsirakka

Комментарии

Информация по комментариям в разработке