மிளகு மசாலா ரெசிப்பீஸ் | Pepper Masala Recipes In Tamil | Egg Pepper Masala | Chicken Pepper Masala

Описание к видео மிளகு மசாலா ரெசிப்பீஸ் | Pepper Masala Recipes In Tamil | Egg Pepper Masala | Chicken Pepper Masala

மிளகு மசாலா ரெசிப்பீஸ் | Pepper Masala Recipes In Tamil | Egg Pepper Masala | Chicken Pepper Masala

#peppermasala #eggpeppermasala #chickenpepperdry #prawnpepperfry

Chapters:
Promo - 00:00
Egg Pepper Masala - 00:24
Chettinad Pepper Chicken Masala - 04:30
Crab Pepper Masala - 09:26
Prawn Pepper Fry - 13:22

முட்டை மிளகு மசாலா
தேவையான பொருட்கள்

முட்டை - 6
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது இடித்தது
கறிவேப்பிலை
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 3 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்க்கவும்.
2. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. பிறகு இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து 2 நிமிடம் வதக்கவும்.
5. பிறகு மிளகு தூள் சேர்த்து கலந்துவிட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
6. பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.
7. பின்பு அடித்த முட்டையை கடாயில் ஊற்றி அடுப்பை அதிக தீயில் வைத்து வேகவிடவும்.
8. பிறகு நன்கு கலந்துவிடவும், முட்டை பாதி வெந்ததும் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.
9. கடைசியாக சிறிதளவு மிளகு தூள் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.
10. முட்டை மிளகு மசாலா தயார்!

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா
தேவையான பொருட்கள்

செட்டிநாடு மசாலா அரைக்க

முழு தனியா - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
முழு மிளகு - 3 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா செய்ய

சிக்கன் - 1 கிலோ
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 5
வெங்காயம் - 4 நறுக்கியது
தட்டிய இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி
தக்காளி - 3 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
அரைத்த மசாலா தூள் - 5 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
உப்பு

செய்முறை :
செட்டிநாடு மசாலா தூள் அரைக்க
1. கடாயில் எண்ணெய் இன்றி, முழு தனியா, சீரகம், சோம்பு, முழு மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும்.
2. வறுத்த மசாலாவை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா செய்ய
3. அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும், இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி பாதி வதங்கியதும், இதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்.
7. 5 நிமிடம் கிளறிய பின், இதில் தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. அடுத்து அரைத்த மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
9. ஈரம் வற்றிய பின் இதில் கறிவேப்பில்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
10. செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா தயார்.

நண்டு மிளகு மசாலா
தேவையான பொருட்கள்

மசாலா விழுது செய்ய

முழு மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 10 பற்கள் நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
தண்ணீர்

நண்டு மிளகு மசாலா செய்ய

நண்டு - 400 கிராம் (3 பெரிய நண்டு)
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 4 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
அரைத்த மசாலா விழுது
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
தக்காளி - 1 நறுக்கியது
தண்ணீர் - 1/2 கப்
கறிவேப்பில்லை

செய்முறை
1. மிக்ஸியில் முழு மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, போட்டு தண்ணீர் இன்றி அரைக்கவும்.
2. சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4. இதில் பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
6. அடுத்து இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
7. பின் இதில் தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
8. மசாலா வதங்கியது இதில் நண்டு துண்டுகளை போடவும்.
9. சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, 10 நிமிடம் கடாயை மூடி மிதமான தீயில் வேகவிடவும்.
10. இறுதியாக கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.

இறால் வறுவல்
தேவையான பொருட்கள்

மசாலா தூள் தயாரிக்க

மல்லி விதை - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி

வறுவல் செய்ய

அரைத்த மசாலா தூள்
இறால் - 200 கிராம்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை - 1” துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 1
காய்ந்த சிவப்பு மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப

Pepper masala dishes are very common in Tamil Nadu. They are very tasty as well as spicy. So here are four easy dishes you can try to enjoy the peppery taste. These are with eggs, chicken, crab and prawns. They are great for lunch/dinner during special occasions. So try these recipes and enjoy! Let me know how they turned out for you in the comments section below.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке