உலகின் முதல் கோவிலைக் கட்டிய தமிழன்? காட்டுக்குள் மறைக்கப்படும் நம் முன்னோர்களின் ரகசிய கடவுள்?

Описание к видео உலகின் முதல் கோவிலைக் கட்டிய தமிழன்? காட்டுக்குள் மறைக்கப்படும் நம் முன்னோர்களின் ரகசிய கடவுள்?

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

0:00 - அறிமுகம்
02:06 - நடுக்காட்டில் வினோத சிலை
04:53 - இந்துக்களின் முதல் சிற்பம்
06:29 - பறக்கும் நாகம்
08:01 - ஏலியன்கள் இப்படியும் இருக்கலாம்
09:59 - உள்ளூர் மக்களுடன் உரையாடல்
12:16 - ஆத்திலி அம்மன் கோவில்
16:26 - பரிணாம வளர்ச்சி
18:40 - உண்மையா? கட்டுக்கதையா?
20:38 - முடிவுரை

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  
Hey guys, போன episode-ல, நாம cave paintings மூலமா நாகர்கள் பாக்க எப்டி இருப்பாங்கன்னு பாத்தோம். ஆனா இந்த evidence மட்டும் பத்தாது. முக்கியமான archeologists-உம், historians-உம் என்ன சொல்லறாங்கன்னா, இந்த பறவை மனுஷங்க எல்லாருமே நாகர்கள் இல்ல, அவுங்க எல்லாம் முகமூடி போட்ட வெறும் சாதாரண மனுஷங்க தான்னு சொல்றாங்க. So, நான் வாலியர்கள் இல்லனா நாகர்கள் ஓட வீடுன்னு சொல்ற கிழ்வாலை கிராமத்துகிட்ட இன்னும் நெறைய evidence எதாச்சம் இருக்கான்னு தேட ஆரம்பிச்சேன். நாகர்கள் உண்மையாவே பாக்க எப்டி இருந்தாங்கன்னு சொல்ற ஒரு solid evidence நான் கண்டுபிடிக்கனும்ன்னு நெனைக்கிறேன். ஆனா, அது திரும்பவும் ஒரு cave painting-ஆ இருக்கக்கூடாது. So, நான் பக்கத்துல இருக்க காட்டுல என்ன இருக்குனு பாக்றேன். இந்த இடம் ரொம்ப ஊருக்கு ஒதுக்க புறத்துல இருக்கு. இந்த இடத்த சுத்தி யாருமே இல்ல. இந்த area-வ, government-ஓட forest department தான் control பண்ணிட்டு இருக்காங்க. இங்க நான் எதாச்சம் கண்டுபிடிக்க போறனா? இல்ல முட்டு சந்து மாறி இடத்துல போய் மாட்டிக்குவேணா? எனக்கு எந்த idea-வும் இல்ல. சூரியன் ரொம்ப வேகமா மறைஞ்சிட்டு இருக்கு. சாயங்காலத்துக்கு மேல காட்டு மிருகங்கள் வெளிய வர ஆரம்பிச்சிடும்ன்னு நெனைக்கிறேன். திடீர்னு, நான் ரொம்ப விதியாசமான area-வ பாத்தேன். அது எனக்கு விசித்திரமான குள்ளர் குகையை தான் ஞயாபகப்படுத்து.

குள்ளர் குகை எப்டி நட்ட நடு காட்டுல ரொம்ப flat-ஆன பாறைகள் நிறைஞ்ச இடமா இருந்ததுன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அதே மாறி ஒண்ண தான், நான் இங்க பாத்தேன். Flat-ஆன சமவெளிக்கு கீழ, ஒரு பாறை படுக்கை அதாவது rock bed இருக்கு. இந்த area ரொம்ப பெருசு. இங்க சுத்தி பாத்தோம்ன்னா, எல்லாம் பெரிய பெரிய பாறைங்க சிதறி இருக்கு. ஆனா, என்னால இங்க specific-ஆ எதையுமே பாக்க முடியல. இத பாக்க ஏதோ just இன்னொரு பெரிய பாறைகள் இருக்க வரலாற்றுக்கு முந்துண இடம் மாதிரி தான் இருக்கு. ஆனா, ஏதோ ஒண்ணு, என்ன ஒரு குறிப்பிட்ட direction-ல இழுக்குது. இத பாக்க இங்க ஒண்ணுமே இல்லாத மாறி இருக்கு. என்னோட உள்ளுணர்வு என்ன ஏமாத்திறிச்சுனு நெனைக்கிறேன், ஏன்னா இங்க வெறும் புதர்களும், மரங்களும் தான் இருக்கு. ஆனா, அதுக்கு பின்னாடி, நான் ஒரு அற்புதமான சிலைய பாத்தேன். இது என்னது? அப்றம், ஏன் இது சம்மந்தமே இல்லாம இங்க நடு காட்ல இருக்கு? நான் இதுவரைக்கும் பாத்த எல்லாத்தவிட இது ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கு. இது ரொம்ப extra ordinary-ஆ இருக்கு. இது ஒரு வெள்ளை colour பாறையால செதுக்கியிருகக்காங்க. நீங்க இத பாத்ததும், ஒரு பறவை இல்ல ஒரு பறவை மனுஷன் மாறி இருக்குன்னு நினைப்பீங்க. இதோட இறக்கை, வால எப்டி நேரா நிக்குதுன்னு பாருங்க. அதாவது மேல பறக்க தயாரா இருக்க மாதிரி position-ல இருக்கு பாருங்க. Cave painting-ல நாகர்கள ஒரு றெக்கை வச்ச உருவமா நான் உங்களுக்கு காட்னது, ஞாபகம் இருக்கா? அந்த cave painting-க்கும் இந்த சிலைக்கும் இருக்க ஒத்துமைய நீங்களே பாருங்களேன்.

இது ரெண்டும் ஒன்னு இல்ல. ஆனா ரெண்டும் பாக்க ஒரே மாதிரி இருக்கு. கண்டிப்பா இது எதர்ச்சியா நடந்து இருக்க வாய்ப்பே இல்ல. இது நிச்சயமா இயற்கையா உருவான பாறை இல்ல, இத தெளிவா செதுக்கி வச்சிருக்காங்க. இன்னும் சொல்லப்போனா, இத flat-ஆ மாத்த ரொம்ப perfect-ஆ செதுக்கி இருக்காங்க, இத polish கூட பண்ணிருக்காங்க. பாருங்க, இந்த வித்தியாசமான சிலைய, யாருமே இல்லாத எடத்துல இருக்க நட்ட நடு காட்டுல பாத்துட்டு இருக்கோம். நான் ஏன் எப்பவுமே ஆளு இல்லாத எடத்துக்கு நடுவுல, இந்த மாதிரி வித்தியாசமான விஷயங்கள கண்டுபிடிக்கிறேன்? இந்த சிலை full-ஆ கிறுக்கி வச்சி நாசம் பண்ணி இருக்குறத என்னால பாக்க முடியுது. இந்த மாதிரி ஆளுங்க நம்மளோட வரலாற்றுக்கு முந்துண evidence-அ அழிச்சிக்கிட்டு இருக்காங்க. நான் இத அளவெடுத்தேன். இது தோராயமா எட்டு புள்ளி எட்டு(8.8) அடி உயரம் இருக்கு. இந்த சிலையோட பகுதி இன்னும் கொஞ்சம் மண்ணுக்கு அடில இருக்குன்னு என்னால கண்டிப்பா சொல்லமுடியும். இந்த மாறி ஒரு பாறைய, கொஞ்சம் மண்ணுக்குள்ள புதைக்காம, இப்படி இந்த angle-ல நிலத்துக்கு மேல செங்குத்தா நிக்கவைக்கறதுக்கு வாய்ப்பே இல்ல. அதனால இதோட மொத்த உயரம் பத்து(10) அடிக்கு மேல இருக்கும். இதோட கொறஞ்ச அகலம் பாத்தீங்கன்னா மூணு புள்ளி அஞ்சு(3.5) அடி இருக்கு, அப்பரோம் அடிப்பகுதியில எட்டு(8) அடி இருக்கு.

திடீர்ன்னு நான் ஏதோ ஒரு extra ordinary விஷயத்த கண்டுபிடிச்சுட்டேன்னு நெனைக்குறேன். இது ரொம்ப ரொம்ப unique-ஆன சிலை. நான் வரலாறுக்கும்(historic period-க்கும்), வரலாற்றுக்கு முந்துண காலத்துக்கும்(pre-historic period-க்கும்) இருக்க link-அ/தொடர்ப கண்டுபிச்சிட்டேன். வரலாற்றுக்கு முந்துண காலக்கட்டத்துல(pre-historic period-ல) மனுஷங்க குகைல தான் வாழ்ந்து வந்தாங்க. அப்போ அவங்க எந்த ஒரு மதம் சம்மந்தப்பட்ட சிலை structure-உம் செஞ்சி வச்சது இல்ல. ஏன்? ஏன்னா, அவங்களுக்கு மதம்-ன்னு எந்த ஒரு விஷயமும் இல்ல. அவங்க கடவுள சிலை மாதிரி வடிவத்துல வழிபடவும் ஆரம்பிக்கல.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке