இந்தோனேசியாவில் இஸ்லாமிய கல்லூரிக்குள் புதைந்திருக்கும் சிவன் கோவில்?

Описание к видео இந்தோனேசியாவில் இஸ்லாமிய கல்லூரிக்குள் புதைந்திருக்கும் சிவன் கோவில்?

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

Hey guys, இன்னிக்கு நாம இந்தோனேசியா ல இருக்கிற ஒரு இஸ்லாமிக் University க்கு உள்ள போயிட்டு இருக்கோம்.
நான் drive பண்ணிக்கிட்டு போகும்போது, முஸ்லிம்களோட பாரம்பரிய சின்னமா வும், அவங்களோட சாதனையாவும் கருதப்படுற இந்த பிரம்மாண்டமான தங்க dome தான் முதல்ல என்ன வரவேற்குது. ஆனா சரியா 14 வருஷங்களுக்கு முன்னால நடந்த விசித்திரமான ஒரு விஷயத்த பத்தி investigate பண்ண தான் இப்ப நான் இங்க வந்து இருக்கேன்.


2009 டிசம்பர் 11ஆம் தேதி அங்க ஒரு புது library க்கான அஸ்திவாரத்த போடறதுக்காக, workers நிலத்த தோண்டிக் கொண்டு இருந்தாங்க. Yes, நிலத்துக்கு 10 அடிக்கு கீழ புதைஞ்சு கிடந்த ஒரு பழங்கால இந்து கோவில் தான் அது. உள்ள, உங்களால ஒரு லிங்கத்த பார்க்க முடியுதா? Yes. இது சிவ பெருமானுக்கான ஒரு கோவில். இதெல்லாம் at least ஒரு 1200 வருஷங்களுக்கு முன்னாலயாவது கட்டப்பட்டிருக்கும்னு Archeologists சொல்றாங்க. இது வழக்கமான ஒரு கோவில் இல்ல. இந்தக் கோவில்ல ரொம்பவே மர்மமானதா ஏதோ ஒரு விஷயம் இருக்கு. நீங்க இந்தக் கோவில, முதல் தடவ கண்ணால பார்த்த உடனேயே, அது ஒரு வினோதமான design ஓட இருக்குறத புரிஞ்சிப்பீங்க. இங்க தனித்தனியா ரெண்டு கோவில்கள் இருக்கு. ஒரு மூலைல, ஒரு விசித்திரமான, மர்மமான கண்ணாடி பெட்டியும் இருக்கு.


அங்க போயி, நானும் கோவில சுத்தி சுத்தி நடந்து சலிச்சதுக்கு அப்புறம் தான், உள்ள போறதுக்கு வாசலே இல்ல ங்கறத கண்டுபிடிச்சேன். உள்ள என்ன இருக்குன்னு பாக்க, நான் ஏறி குதிக்க வேண்டி இருந்தது. உடனே நான் அந்த லிங்கத்தப் பார்த்து attract ஆயிட்டேன். அந்த லிங்கத்த தொட்டுப் பார்க்கவும் தட்டிப் பார்க்கவும் நெனச்சேன். இந்த லிங்கத்துல ஏதோ ஒண்ணு ரொம்ப விசித்திரமா இருக்கு. அது என்னன்னு உங்களால சொல்ல முடியுதா? இது 2 பகுதியா இருக்கிற ஒரு லிங்கம். இது ரொம்ப அபூர்வமானது. அப்படின்னா என்ன?
லிங்கங்களுக்கு வழக்கமா 3 பகுதிகள் இருக்கும் - வட்டமா ஒரு வழவழப்பான cylinder போல மேல் பகுதியும், octogonal ஆவோ , 8 பட்டைகளோடயோ ஒரு நடு பாகமும், நாலு பக்கங்களோட ஒரு square ஆன அடிப்பகுதியும் இருக்கும்.


ஆனா இங்க, நாம அந்த octogonal ஆன நடுப்பகுதிய பாக்க முடியாது. இதுக்கு ரெண்டு பகுதிகள் மட்டும் தான் இருக்கு. வட்டமான மேல் பகுதியும், square shape ல ஒரு அடிப்பகுதியும் மட்டும் தான் இருக்கு. ஏன் பழங்கால ஸ்தபதிங்க வழக்கத்துக்கு மாறா இப்படி ஒரு லிங்கத்த செஞ்சாங்க?
ஏன்னா, வேணும் போதெல்லாம், அந்த லிங்கத்த, அதோட base ல இருந்து வெளியே எடுக்கணும்னு அவங்க நினைச்சாங்க.
லிங்கத்த, அசையாதபடி base க்குள்ள உட்கார வச்சு அது நகர முடியாம செய்யறதுக்காகத்தான் வழக்கமா இந்த octogonal பகுதிய செதுக்குவாங்க. அதனாலதான் இங்க, இந்த லிங்கத்த நடு பகுதியோட செதுக்கல.

ஆனா பழங்கால builders ஏன் இந்த லிங்கத்த, அடிக்கடி வெளிய எடுக்கணும்னு நினைச்சாங்க?
Archeologists அந்த லிங்கத்த, அடிப்பகுதி அதாவது யோனி ல இருந்து வெளியே எடுத்தப்போ அடியில இருந்த இந்த square ஆன குழிக்குள்ள கண்ண கவர்ர்ற மாதிரியான ஒரு விஷயத்த பார்த்தாங்க. அவங்க கல்லால ஆன ஒரு பெட்டிய கண்டுபிடிச்சாங்க. அத அவங்க தெறந்து பாத்தப்போ shock ஆகிட்டாங்க. உள்ள சிக்கலான ஒரு கல் தட்டு, நிறைய பள்ளங்களோட இருந்தது. இதுபோல ஒண்ண அவங்க இதுக்கு முன்னால பார்த்ததே இல்ல. அதுல, சரியா எட்டு திசைகளோட align ஆகுற மாதிரி எட்டு பெரிய அம்புக்குறிகள் செதுக்கப்பட்டு இருந்தது.


அந்த அம்புக்குறிங்களுக்கு இடையில எட்டு சின்ன, rectangular பள்ளங்களும் அதுல செதுக்கப்பட்டு இருந்தது. நடுவுல perfect ஆ செதுக்கப்பட்ட ஒரு வட்டம். ஆக மொத்தம் 17 சின்ன சின்ன குழிகள். இந்த advance ஆன கல்வேலப்பாடு Archeologists அ மெய்மறக்க வச்சிடுச்சு. உடனடியா அவங்களோட chief ம், மத்த அதிகாரிங்களும் இந்த அதிசயத்த பாக்குறதுக்காக வந்து குமிய ஆரம்பிச்சுட்டாங்க. எப்படி 1200 வருஷங்களுக்கு முன்னால வாழ்ந்த பழமையான மக்களால இப்படி ஒரு advance ஆன கல் வேலப்பாட செய்ய முடிஞ்சுது? இதையெல்லாம் செதுக்குறதுக்கு அவங்க ஏதாவது machine அ உபயோகப்படுத்தி இருப்பாங்களான்னு, அவங்க ரொம்ப அதிசயப்பட்டாங்க. ஆனா அந்த பள்ளங்களுக்குள்ள அவங்களுக்கு கிடைச்ச விஷயத்துக்கு முன்னால இதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு ஆயிடுச்சு.


ஒரு பள்ளத்துக்குள்ள neat ஆ வெட்டப்பட்டு அந்தப் பள்ளத்துக்குள்ள சரியா பதிஞ்ச மாதிரி ஒரு மெலிசா தங்க foil இருந்தது. பக்கத்துல இருந்த rectangular பள்ளத்துல ஒரு மெலிசான rectangular வெள்ளி foil அ perfect ஆ வச்சிருந்தாங்க.
கிழக்காலேயும், வடகிழக்காலயும் இருந்த ரெண்டு பள்ளங்கள தவிர மத்த பள்ளங்கள்ல எல்லாம் ஒண்ணு விட்டு ஒண்ணா தங்க foil ம் வெள்ளி foil லுமா மாறி மாறி continuous ஆ இருந்தது.
அதுல, oval shape ல இருக்கிற வெண்கல துண்டுகள நிரப்பி வச்சிருந்தாங்க. இத நாம மறுபடியும் recreate பண்ணும் போது, இது பாக்குறதுக்கு ஏதோ வினோதமான கருவிய போல தோண ஆரம்பிக்கிறத நீங்களே புரிஞ்சிப்பீங்க. ஆனா நடுவுல இருந்த வட்டத்துக்குள்ள என்ன இருந்தது?

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #tamilnadutemple #temples #indonesia

Комментарии

Информация по комментариям в разработке