அசத்தலான முன்னோர்களின் இன்ஜினியரிங் டெக்னாலஜி! மறைக்கப்பட்ட இந்திய ரகசியங்களா? |பிரவீன் மோகன்

Описание к видео அசத்தலான முன்னோர்களின் இன்ஜினியரிங் டெக்னாலஜி! மறைக்கப்பட்ட இந்திய ரகசியங்களா? |பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - விஸ்வகர்மா
01:25 - தியோடோலைட்
02:27 - Levelling rod
04:17 - மூணு தலை சிற்பம்
06:40 - Plum Bob (மட்டம் பார்ப்பதற்காக)
09:01 - மண்ணை சோதிக்கும் கருவி
11.01 - பெயர் தெரியாத கருவி
12:00 - பழங்காலத்து Sound டெக்னாலஜி
12:51 - விஸ்வகர்மா மற்றும் பிரம்மா
13:37 - முடிவுரை

Hey guys, இன்னிக்கு நம்ப Vishwakarman அப்படின்ற ஒரு பழங்கால Hindu ஸ்தபதிய பத்திதான் பாக்க போறோம். அப்பறம், அவர பத்தி நம்ப தெரிஞ்சு வச்சிருக்கறது அத்தனையும் தப்புன்னும் புரிஞ்சிக்க போறோம்.
இந்த சிற்பத்தோட வயசு 900. இதுல Vishwakarman நெறைய தலைகளோட நெறைய ஆயுதங்களோட இருக்காரு. இத பாத்தவுடனே நமக்கு இப்படித்தான் தோணுது. இல்லையா ?
ஆனா அது உண்மை இல்ல.
நெறைய தலைகளோட இருந்தா எப்படி நடுவுல இருக்கற தலை வயசானதாகவும் மத்த ரெண்டு தலைகளும் இளமையானதாகவும் இருக்கும்?
அப்பறம் எடது பக்கத்துல இருக்கற ஆயுதத்த பாருங்க. அது ஓரு ஆயுதமே இல்ல. அந்த தல உண்மையா அந்த கருவிக்குள்ள பாத்துகிட்டு இருக்கு.

இப்ப மொதல்ல யாரு இந்த Vishwakarman அப்படின்றத பாத்துடுவோம்.

நம்ம பழய இந்திய புத்தகங்கள் பிரகாரம் பாத்தா Vishwakarman ன்றவரு ஒரு நல்ல architect, அதாவது ஒரு நல்ல வடிவமைப்பாளர். Dwaraka மாதிரியான பெரிய நகரங்களையும் பழமையான கோவில்களையும் ரொம்ப சிறப்பா நிர்மானிச்சிருக்க ஒரு திறமைசாலி.
ஒரு architectக்கு ஆயுதம் தேவையில்ல இல்லையா? அப்ப அவர் கைல வச்சி பாத்துட்டு இருக்கறது என்ன?
அது ஒரு theodolite.
இப்ப theodoliteன என்னன்னு பாப்போம்.
இந்த கட்டடங்கள நிர்மாணிக்கற பொறியாளர்கள் எப்ப பாத்தாலும் ஏதோ ஒரு சாதனம் வழியா பாத்துகிட்டேயிருக்காங்களே அது என்னன்னு எப்பவாச்சும் யோசிச்சிங்களா?
அது தான் theodolite. ஒரு சின்ன telescopeன்னு வச்சுகங்களேன்.
இப்ப இங்க இருக்கர இந்த காலத்து theodolite பாருங்க, அந்த பொறியாளர் அதன் வழியே எப்படி பாக்கறாருன்னு பாருங்க.
அதோட அந்த பழைய theodoliteல அந்த முகம் எவளோ தெளிவா அதன் வழியே பாக்குதுன்னும் பாருங்க. ரொம்ப சரியா பொருந்துது இல்லிங்களா? ஆனா எதுக்கு இந்த theodolite உபயோகிக்கறாங்க?

ஒரு இடம், கட்டட வேல ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, சமதளமா அதாவது flatஆ இருக்கா அப்படின்னு பாக்கத்தான் இத உபயோகிக்கறாங்க.
நிஜத்துல நெறய இடங்கள் கிடைமட்ட அளவுல அதாவது horizontal அளவுல, சமமா இருக்கா அப்படின்னு பாத்தா சமமா இருக்காது. இத எப்படி சமதளமாக்குறது.

நெலத்தோட ஒரு பக்கத்துல theodolite வச்சிடனும், அப்பறம் இன்னொரு பக்கத்துல அளவுகளோட இருக்கற ஒரு leveling rod இல்லன்னா ஒரு leveling staff, அதாவது சமன் செய்யற தடி, அத வச்சிடனும். இந்த சிலையோட இன்னொரு கைல அது தான் இருக்கு.
இது தான் leveling rod, இந்த சிலைல இருந்த குறிப்புகள் எல்லாம் அரிப்பு அதாவது corrosionல போய்டிச்சி. ஆனா மத்த சிலைகள்ள இது தெளிவா தெரியுது பாருங்க.
உதாரணத்துக்கு இந்த சிலைய பாருங்க. இதுல தெளிவா தெரியுது பாருங்க. இது 1000 வருஷங்கள் பழமையான சூரியக் கோவில், Modheraல இருக்கு.

மத்த சிலைகள்ளயும் குறிப்புகள் எல்லாம் தெளிவா தெரியுது பாருங்க. நான் மொதல்ல இது ஒரு rulerஅதாவது ஒரு அளவுகோலா இருக்கும் இல்லன்னா ஒரு line gaugeஆ இருக்கும் அப்படின்னு தான் நினச்சேன். ஆனா அவர் கட்டடம் கட்ட போற இடங்கள எல்லாம் சோதனை பண்ணறதுக்கு leveling rodம் theodoliteம் use பண்ணி இருக்காருன்றது இப்ப தான் தெளிவா புரியுது.

இங்க இன்னொரு சிற்பத்துல தெளிவா இருக்குபாருங்க. இதுலயும் leveling rod ஒரு கைலயும் theodolite இன்னொரு கைலயும் வச்சிருக்காரு பாருங்க.
பழங்கால கோவில்கள்ள பாத்தா ஒரு விஷயம் மட்டும் எப்பவுமே எனக்கு ரொம்ம்ப ப்ரம்மிப்பா இருக்கும்ங்க.
இவ்வளவு துல்லியமா சமதளமா தரைய எப்படி மாத்தி கொண்டு வராங்கன்றது எனக்கு எப்பவுமே ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்.
மல மேல கூட மொதல்ல சமதளமா தரையை அமைச்சுட்டு அது மேல இவங்களால கோவில் கட்ட முடிஞ்சிருக்கு பாருங்க. எப்படி அப்படி கட்டுனாங்கன்றது இப்ப எனக்கு நல்லா புரியுது.

இங்க கூட ரொம்ப தெளிவாவே இவர் ஒரு multi-headed god இல்ல, அதாவது பல தலைகளோட இருக்கற கடவுள் இல்ல... அப்படி ன்னு செதுக்கி காட்டி இருக்காங்க.
இங்க என்ன சொல்ல வராங்கன்னா நெறைய பேரு ஒரே எடத்துல வேல பாக்கறதையும், ஒருத்தர் theodolite வழியா பாக்கறதையும், இன்னொருத்தர் leveling rodல பாக்கறதையும், இதுல கொஞ்சம் தாடி வச்ச வயசானவர் எல்லாரையும் மேற்பார்வை பண்ணறதையும் ஒன்னா காட்றாங்க.

இன்னொரு 1000 வருஷத்து சிலை கூட இதே விஷயத்த தான் சொல்லுது. இதுலயும் இளமையா இருக்கறவங்க ரெண்டு பேரு அதே சாதனங்கள வச்சிகிட்டு ரெண்டு பக்கத்துலயும் நிக்கறாங்க அப்பறம் கொஞ்சம் வயசானவர் நடுவுல இருக்காரு. இப்படி திட்டம் போட்டுதான் இவங்க Vishwakarman சிலைகளை செதுக்கி இருக்காங்கன்றது இப்ப தெளிவா தெரியுது.

கட்டட பொறியாளர்கள் எல்லாம் 3D படங்கள் அதாவது முப்பரிமாணம படங்கள் வரையறாங்க இல்ல. இது அது மாதிரி ஒரு குறிப்பா கூட இருக்கலாம். இது இப்ப எனக்கு இன்னும் கொஞ்சம் ஆர்வமா இருக்கு , ஏன்னா இது வரைக்கும் Vishwakarman அன்றவரு ஒருத்தர் அப்படின்னு நெனச்சுகிட்டு இருந்தோம்.

#Ancienttechnology #Hinduism #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке