கைலாசநாதர் கோவிலில் மறைந்துள்ள ஆன்மீக ரகசியங்கள்! யாளிக்குள் ஒளிந்திருக்கும் வினோத குறிப்புகள்?

Описание к видео கைலாசநாதர் கோவிலில் மறைந்துள்ள ஆன்மீக ரகசியங்கள்! யாளிக்குள் ஒளிந்திருக்கும் வினோத குறிப்புகள்?

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - அறிமுகம்
00:36 - ரகசிய தியான அறை
03:40 - இதுல இருக்குறது geopolymer-ஆ?
05:35 - இது தான் முதல் இந்து கோவிலா?
07:04 - கருவறையில் உள்ள லிங்கம்
07:42 - மரண வாசல்
08:19 - ஜனன வாசல்
09:27 - யாளிக்கு பின் மறைந்துள்ள ரகசியம்
12:14 - முடிவுரை

Hey guys, இன்னைக்கு நாம காஞ்சிபுரத்துல இருக்கற கைலாசநாதர் கோயிலை பார்க்கப் போறோம். சிலர் இத Ellora Caves-ல இருக்கற world-famous கைலாச கோயிலோட model-லா நினைக்கறாங்க. இன்னும் சில பேர் இதுதான் எல்லா கோயில்களுக்கும் origin- னு நினைக்கறாங்க, அவ்ளோ ஏன் spirituality-க்கு கூட இதுதான் origin -னு நினைக்கறாங்க.

இந்த முழு கோயிலையும் என்னோட அடுத்த video ல காட்டுறேன். ஆனா இந்த video ல இந்த கோயில்ல ஒளிஞ்சு இருக்குற spirituality -யோட secrets-அ, அதாவது ஆன்மீக ரகசியத்தை காட்டணும்னு நினைக்கிறேன்.

இங்க நிறைய relief carvings- லாம் இருக்கு. அதுல இதை தான் நான் உங்களுக்கு காட்ட போறேன். உங்க கண் automatic ஆ இங்க centre-ல இருக்கற சிற்பத்துக்கு தான் போகும். இது அர்ஜுனனுக்கும் சிவனுக்கும் நடுல நடந்த ஒரு fantastic ஆன கதை.

உங்களுக்கு அந்த கதை தெரியும்னு நினைக்கிறேன். நீங்க அந்த கதையை enjoy பண்ணியிருப்பீங்க correct-ஆ? சரி இப்போ அடுத்து என்ன பண்ண போறீங்க? உங்க கண்ணு natural -ஆ யாளி-ங்க இருக்கற பக்கம் போகுது. இப்ப, அதோட ரெண்டு கையையும் பாருங்க. அதோட கை என்ன பண்ணுது?

ஒரு யாளியோட கை இந்த பக்கம் காட்டுது, இன்னொரு யாளியோட கை அந்த பக்கம் காட்டுது. of course, எனக்கு இது ரொம்ப interesting -ஆ இருக்குது. இந்த சிற்பம் உங்களுக்கு பிடிச்சிருக்கும், கோயிலும் பிடிச்சிருக்கும். சரி இப்போ அடுத்து என்ன பண்ண போறீங்க?

இது பக்திய பத்தின விஷயம் இல்ல, இந்த யாளிகள் உங்களை இந்த பக்கம் போக சொல்லுது. உள்ள என்ன இருக்குனு பாக்கலாம் வாங்க. இங்க, இந்த இடத்துல ஒரு ஆள் உட்கார அளவுக்கு இடம் இருக்கு. இது ஒரு isolated இடம், அதாவது தனிமைப்படுத்த பட்ட ஒரு இடம் மாதிரி இருக்குது. வெளில இருந்து யாரும் உங்களை பாக்க முடியாது. அப்போ இது தியானம் பண்றதுக்கு சரியான ஒரு இடம். இப்ப நாம போய் அந்த பக்கத்துல என்ன இருக்குன்னு பாக்கலாம் வாங்க.

ஏன்னா இந்த யாளி இந்த பக்கத்துல இருக்கற வழிய காட்டுது. இங்க தியானம் பண்றதுக்கு இன்னொரு இடம் இருக்கு. அப்ப, இதத்தான் யாளி நமக்கு சொல்லுது. இது வெறும் பக்திய பத்தின விஷயம் மட்டுமே இல்ல. இது enlightenment (ஞானத்தை) அடைறத பத்தியும் தான். ஆனா இங்க இன்னொரு interesting-ஆன விஷயமும் இருக்கு. just இந்த sound-அ உத்து கவனிங்க.
ஓம்…
ஓம்…
ஓம்…
ஓம்…

இந்த chamber -ல இருந்து மந்திரத்தை உச்சரிச்சா அந்த அதிர்வு தெளிவா எதிரொலிக்குது. துறவிகள் இப்படித்தான் இந்த கோயிலை பயன்படுத்தினாங்க(use பண்ணிருக்காங்க).

நீங்க இந்த chamber உள்ள உட்கார்ந்து மந்திரத்தை உச்சரிச்சா ஒரு வித்யாசமான எதிரொலிப்ப உணரலாம். வெறும் sound-ல மட்டும் இல்ல. உடம்புலயும் மனசுலயும் கூட அந்த vibrations தெரியும். இந்த மாதிரி வெறும் ஒன்னு ரெண்டு chambers இல்ல. இத மாறி மொத்தம் 56 chambers இந்த கோயில்ல இருக்கு. பழங்காலத்துல இருந்த துறவிகள் கூட்டங்கூட்டமா வந்து இந்த chambers-ல தியானம் பண்ணிருக்காங்க.

இந்த கோயிலுக்கு நான் நெறய தடவ வந்திருக்கேன். சொன்னா நம்ப மாட்டீங்க, இன்னிக்கும் கூட இந்த மாறி தியானம் பண்றது நடந்துட்டு தான் இருக்கு. நீங்க அதிகாலைலயோ இல்லனா ஆள் நடமாட்டமில்லாத நேரத்திலயோ வந்தா, சில துறவிகள் இங்க வந்து தியானம் பண்றத நீங்க பாக்கலாம்.

சில பேர் திரும்ப திரும்ப use பண்றதுக்காக ஒரு குறிப்பிட்ட chambers-அ வச்சிருக்காங்க. அப்போ யாளியோட இந்த signs எப்படி இருக்குனு பாத்து அத follow பண்ணா, நமக்கு நிறைய தகவல் கிடைக்கும்ன்னு நினைக்குறேன். நான் தாராசுரம் கோயில்ல யாளிகள காட்டுனது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அங்க எப்படி யாளிளோட வாலும், அதோட உடம்பும் பிரமிப்பான சில விஷயங்கள சொல்லுதுன்னு நான் காண்பிச்சேன்.

இந்தியால இருக்கற பழமையான கோயில்களுக்கு நீங்க போறப்ப இந்த யாளிகள முதல கவனிங்க. ஆனா, இந்த கோயில்ல யாளிகள் வேற ஏதோ ரகசியத்தை நமக்கு சொல்லுது. கைலாசநாதர் கோயில் முழுக்க முழுக்க sandstone-அயும் granite-அயும் வச்சு கட்னதுன்னு Archaeologists நமக்கு சொல்றாங்க. ஆனா நீங்க உத்து பாத்தா, யாளிகள பாறையால செய்யலன்னு உங்களுக்கே தெரியும்.

இங்க யாளிக்குள்ள, செங்கலோட துகள்கள் (particles) இருக்கறத நாம பாக்கலாம். வெறும் ஒன்னு ரெண்டு சிற்பங்கள்ல இல்ல, நிறைய நிறைய சிற்பங்கள்ல நாம இதே மாறி பாக்க முடியும். எப்படியோ, lime mortar மாறி வேற ஏதோ ஒரு material-ல இந்த சிலைகளுக்குள்ள வச்சிருக்காங்க.

இது யாளிகள்ல மட்டும் இல்ல. பாருங்க, இந்த panel-அ கூட sandstone-ல பண்ண மாதிரி இருக்கு. ஆனா அது தான் இல்ல.
உள்ள இருந்து, செங்கல் particles எட்டி பாக்குது பாருங்க. இந்த கோயில் sandstone-அ வச்சோ இல்ல, சாதாரண பாறையை வச்சோ கட்டுனது இல்ல. இது நெறய வித்தியாசமான components- லாம் சேந்த ஒரு artificial material-ஆல கட்டுனது.

இன்னைக்கு நாம Geopolymer technology-ங்குற இதே technology-அ தான் use பண்றோம். இத வச்சு artificial rocks மாதிரி பண்றோம். இது வெறும் theory இல்ல. இந்த கோயிலோட பூசாரி என்ன சொல்றார்னு கொஞ்சம் கேளுங்க. இந்த கோயில கட்டறதுக்கு சாதாரண பாறையை use பண்ணாம எதுக்கு geopolymers use பண்ணாங்க?

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке