Perumal & Providence Vol 6 | Kaasaiyaadai | S Srivathsan | Manoj Krishna

Описание к видео Perumal & Providence Vol 6 | Kaasaiyaadai | S Srivathsan | Manoj Krishna

Kaasaiyaadai | Perumal & Providence - Vol. 6

Kaasaiyaadai Pasurams are composed by Thirumangai Azhwar in the section 1058-1067 Verses of the Nalayara Divya Prabhandham.

Tune composed and Sung by S Srivathsan

Music Produced and Arranged by Manoj Krishna

Mridangam: Sarvesh Karthick

Tabla and other Percussions: Martin

Violin: Tirucherai Karthik

Recorded at Atrium Sound studios by Anish Mohan and Manoj Krishna

Creative Consultant: Ravi G

Project curation: Aditya Balasundaram, Natteri Srihari Parthasarathy Swami.

Mixed and Mastered by Ishit Kuberkar at Soundpotion Studios

Video Edited by: Adarsh Devarajan

Artwork: Neelasaraswathi

Music Produced and Owned by Sound Creed LLP
_________________________________________________________________________________________

Lyrics:

||கசையாடை||

கசையாடை மூடியோடிக் காதல் செய்தானவனுர்
நாசமாக நம்பவல்ல நம்பி நம் பெருமான் |
வேயினன்ன தோள் மடவார் வெண்ணெயுண்டான் இவனென்று
ஏசநின்ற எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே ||

தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன்முடிகள் ஒன்பதோடொன்றும் அன்று |
செய்த வெம்போர் தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே ||

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாயினால் மாள முனிந்து அவனே |
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே ||

பந்தணைந்து மெல்விரலாள் பாவை தன் காரணத்தால்
வென்திறலேறேழும் வென்றவேந்தன் விரிபுகழ்சேர் |
நந்தன் மைந்தனாகவும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே ||

பாலனாகி ஞாலமேழும் உண்டு பண்டு ஆலிலைமேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரை கண்ணன் ,எண்ணில் |
நீலமார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே ||

சோத்த நம்பியென்று தொண்டர்மிண்டித் தொடர்ந்து தழைக்கும்
ஆத்தன்நம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்க்கெல்லாம் |
மூத்த நம்பி முக்கணம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே ||

திங்களப்பு வானெரி காலாகி திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண் |
தொங்கலப்பு நீள்முடியான் சூழ்கடல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே ||

முனிவன் முர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்து
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன் |
தனியன் சேயன் தானொரு வனாகிலும் தன்னடியார்க்கு
இனியன் எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே ||

பந்திருக்கும் மெல்விரலாள் பாவை பனி மலராள்
வந்திருக்கும் மார்வன் நீலமேனி மணிவண்ணன் |
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் மைந்த
இந்திரற்கும் தம்பெருமான் எவ்வுள் கிடந்தானே ||

இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம்புறவின் மங்கையர்கோன் கலியன் |
கொண்ட சீரால் தண் தமிழ் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வார் அமருலகே ||

__________________________________________________________________________________________

kASaiyADai mooDiyODi kAdalSei dAnavan oor
nASamAha nambavalla, nambi namberumAn |
vEyin annatOL maDavAr veNNai uNDAn ivan enru
ESa ninra emberumAn evvuL kiDandAnE ||

taiyalAL mEl kAdal Seida tAnavan vALarakkan
poiyyilAda ponmuDihaL onbadODu ornrum, anru |
Seida vempOr tannil angOr SenjarattAl uruLa
eida endai emberumAn evvuL kiDandAnE ||

munOr toodu vAnarattin vAyil mozhindu arakkan
mannoor tannai vALiyinAl mALa munindu, avanE |
pin Or toodu AdimannarkAhi perunilattAr
innAr toodan ena ninrAn evvuL kiDandAnE ||

pandaNainda mel viralAL pAvai tan kAraNattAl
vendiral ErEzhum venra vEndan viri puhazh SEr |
nandan maindanAha hum nambi namberumAn
endai tandai tamberumAn evvuL kiDandAnE ||

bAlanAhi jnAlam Ezhum uNDu, paNDu Alilai mEl
SAla nALum paLLikoLLum tAmaraikkaNNan eNNil |
neelam Ar vaNDu vAzhum neidal andaN kazhani
Elam nArum paimburavin evvuL kiDandAnE ||

SOttam nambi enru toNDar miNDi toDarndu azhaikkum
Attan nambi SengaN nambi Ahilum dEvarkku ellAm |
mootta nambi mukkaN nambi enru munivar tozhudu
Ettum, nambi emberumAn evvuL kiDandAnE ||

tingaL appuvAn eri kAlAhi tiSaimuhanAr
tangaL appan SAmiyappan bAhattu irunda vaNDuN |
tongal appu neeL muDiyAn Soozh kazhal SooDa ninra
engaL appan emberumAn evvuL kiDandAnE ||

munivan moorti moovarAhi vEdam virittu uraitta
punidan poovai vaNNan aNNal puNNiyan viNNavar kOn |
taniyan SEyan tAnoruvan Ahilum tannaDiyArku
iniyan endai emberumAn evvuL kiDandAnE ||

pandirukkum melviralAL pAvai panimalarAL
vandirukkum mArvan neela mEni maNivaNNan |
andarattil vAzhum vAnOr nAyahanAi amainda
indirarkum tamberumAn evvuL kiDandAnE ||

iNDai koNDu toNDarEtta evvuL kiDandAnai
vaNDu pADum paimburavil mangaiyar kOn kaliyan |
koNDa SeerAl taNDamizh Sei mAlai eeraindum vallAr
aNDam ALvadANai anrEl ALvar amrulahE ||

Комментарии

Информация по комментариям в разработке