ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 8. அரக்கிகள் நடுவில் சீதை

Описание к видео ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 8. அரக்கிகள் நடுவில் சீதை

ஸ்ரீ ராமஜயம்! ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள்

எழுத்து & இயக்கம் : வேதாந்த கவியோகி நாகஸுந்தரம்- புதுடில்லி

இசையமைப்பு & பாடல் : அபர்ணா கிருஷ்ணன்- மும்பை

தைரியம், நல்லபுத்தி, வாக்குவன்மை அனைத்தும் அருளுபவர் ஸ்ரீமாருதி என்கிற ஆஞ்சநேயஸ்வாமி. அவரின் வீரச்செயல், சீதையைக்கண்டது, தூதுபோனது, இலங்காதகனம் ஆகிய இராமாயண காவியத்தின் சிறப்பு மிக்க பகுதியே ஸுந்தர காண்டம் ஆகும். இராமாயணம் முழுவதுமே இசை நாடகமாக இராமநாடக கீர்த்தனைகளாக ஆக்கியவர் ஸ்ரீஅருணாசல கவிராயர். இப்பால் நாகஸுந்தரத்தால் சில பாடல்கள் எழுதப்பட்டு அவை ஸ்ரீமதி அபர்ணா கிருஷ்ணனால் இசைப்பாடல்களாக பாடப்பட்டு இங்கே வெளிவருகிறது.

10. சீதை துக்கித்தது

ராகம் : முகாரி

கிலேசம் மிக ஆகுதே மனம் ஏ ராமா !
கெட்ட அரக்கரின் மத்தியிலே கிடந்துழன்று (கி)

கொடுத்த கெடுவுக்குள் கொண்டவர் வருவாரோ
தடுத்தாலும் பிராரப்தம் தீர்ந்திடப் போமோ (கி)

ஸ்ரீராமன் வந்தேன்னை சீக்கிரம் கைப்பிடிப்பாரோ
ஸ்ரீராம பாணத்தால் இராவணன் எப்போ மடிவானோ
வாளாய் இருப்பது வேந்தர்க்கு அழகாமோ
தூளாய் துஷ்டர்கள் தொலைந்து போவாரோ (கி)

தூதாய் எவரும் கடல் தாண்டி வரவில்லை
பாதார விந்தத்தில் (பரி)பூர்ணமாய் பணிந்தேனே
ஆதாரமில்லை அருள் தந்து ஆட்கொள்வாய்
நீதானே சரண் ராமா நானுடல் விடுவேனோ (கி)

Комментарии

Информация по комментариям в разработке