மூடி மறைக்கப்படும் தமிழனின் ரகசியம்! 😱😱

Описание к видео மூடி மறைக்கப்படும் தமிழனின் ரகசியம்! 😱😱

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - முன்னுரை
02:01 - விசித்திரமான சூரிய கடவுள்
03:02 - நட்சத்திரத்தின் சிற்பம்
04:19 - ரகசிய சின்னம்
06:30 - கல் சங்கிலிகள்
07:39 - ராசி பலன்கள்
11:34 - முடிவுரை

Hey guys! என்னோட போன video ல, திருப்பெருந்துறைல இருக்கிற பழங்கால கோவில் ல, நான் உங்களுக்கு 27 நட்சத்திரங்கள் அதாவது lunar stations அ செதுக்கி இருக்கிறத காமிச்சிருக்கேன். இந்த video ல நான் அதுக்கு சம்பந்தப்பட்ட மத்த விஷயங்களுக்குள்ள போகப்போறேன். இந்த நட்சத்திரக் கூட்டங்களுக்கு பக்கத்துலயே, நீங்க நிறைய விசித்திரமான சாமிங்கள பார்க்கலாம். அவங்க எல்லாம் யாரு? வாங்க! கொஞ்சம் பக்கத்துல போய் பாப்போம். இது சந்திரன் அதாவது நிலா கடவுள். வேதங்கள் சொல்ற படி இந்த நிலா கடவுள் ஒரு ஆண். இந்த 27 நட்சத்திரங்களையும் இவரு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்காரு. இந்த கத, ரொம்ப விசித்திரமாவும், அர்த்தமில்லாமயும், இருக்குல்ல? Sense ஏ இல்லாம இருக்கு தானே?இல்ல, ஏன் இங்க 27 நட்சத்திரங்கள் இருக்கு? ஏன் வானத்த 25 ஆவோ 50 ஆவோ வேற வேற பிரிவுகளா பிரிக்கல ?சரியா?

இந்த 27 நட்சத்திரங்களும், நிலாவையும், நம்ம பூமியையும் ஒரு தடவ முழுசா சுத்தி வரதுக்கு எடுத்துக்கர 27 நாட்கள குறிக்குது.So, நிலா ஒரு மாசத்தோட ஒவ்வொரு நாள்லயும் ஒவ்வொரு நட்சத்திரத்தோட இருக்கு .அதுதான் 27 நாட்கள் இல்லாட்டி sidereal month ன்னு சொல்றாங்க. இதத்தான் இந்திய ஏடுகள் (நூல்கள்ல) எல்லாம் சந்திரன் 27 நட்சத்திரங்கள கல்யாணம் பண்ணி இருக்கிறதா சொல்லி இருக்கிறதோட மறைமுகமான அர்த்தம். நட்சத்திரங்களுக்கு பக்கத்துல நிலாவ செதுக்கி இருக்காங்கன்னா அதுக்கு இன்னொரு பக்கத்துல, என்னத்த செதுக்கி இருப்பாங்க?அது சரிதான் சூரிய கடவுள் அதாவது சூரியன்.

இது, வழக்கத்துக்கு மாறான ஒரு காட்சியா (விஷயமா)இருக்கு. ஏன்னா சூரியன தன்னோட தேர்ல, ஏழு குதிரைகளோடஇருக்கிற மாதிரி இங்க காமிக்கல. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, அவரு செருப்பு போட்டுக்காம வெறும் காலோட இருக்காரு. அவரோட கால்ல சிலம்புகள போட்டுக்கிட்டு இருக்கிறத நீங்க பாக்கலாம். அவரோட பாதத்துல கால் விரல்கள கூட பாக்கலாம். வடநாட்டுல ( North Indiaல ) சூரிய கடவுள் காமிக்கப்பட்டு இருக்கிற விதத்துல இருந்து இது ரொம்ப வித்தியாசமா இருக்கு பாருங்களேன்.

உதாரணத்துக்கு மோதரா சூரிய கோவில்ல நீங்க எப்படி சூரிய கடவுளை பார்த்தீங்க? நீளமான neck வச்ச gum boots போட்டுக்கிட்டு இருக்கிற மாதிரி தானே? இது, அதுக்கு அப்படியே முழுசா மாறுபட்ட விதத்தில ( oppositeஆ) இருக்கு பாருங்க! இங்க ஒரு வில்லயும் அம்பயும் புடிச்சுகிட்டு இருக்குற மாதிரி ஒரு அபூர்வமான (rare ஆன ) சிற்பம் இருக்கு. உங்களால இது யாருன்னு Guess பண்ண முடியுதா? இதுதான் புதன் ன்னு சமஸ்கிருதத்திலயும் தமிழ்லயும் சொல்லப்படுற மெர்குரி ங்குர கிரகம்( கோள்) . இந்த சிற்பத்துக்கு மேல, இதுதான் mercury கிரஹம் ங்கரத confirm பண்ற மாதிரி ஒரு சின்ன கல்வெட்டு எழுத்துக்கள் புதன் ன்னு காமிக்குது. இத பாருங்க! இங்க, இன்னொரு சிற்பம். இது எந்த சாமிய குறிக்குது? இவரு, மூணு வேற வேற ஆயுதங்களோட காட்டிருக்காங்க. ஒரு திரிசூலம், ஒரு வஜ்ராயுதம், ஒரு ஈட்டி, மூணையும் வச்சிருக்காரு.இவரு Mars ங்கிற செவ்வாய் கிரகத்த குறிக்கிறாரு.


இவர, மங்களன் னு சமஸ்கிருதத்துலயும் செவ்வாய் ன்னு தமிழ் லயும் சொல்லுவாங்க.
இதெல்லாம் ரொம்ப rare ஆன சிற்பங்கள். கிரகங்கள், வானத்துல இருக்கிற மத்த கோள்கள், இதையெல்லாம் கோவில்கள் ல பெரிய சிற்பங்களா செதுக்கி வச்சு இருக்கிறத நாம பாத்துருக்க மாட்டோம். நாம வழக்கமா இந்த கிரகங்கள, சின்ன சின்ன சிலைகளா ஒரு group ஆ தான் பார்த்திருப்போம். இப்ப நீங்க பார்த்துக்கிட்டு இருக்கிறது ரொம்ப அபூர்வமான ஒண்ணு.

ஆனா இந்த video ல, நான் உங்களுக்கு, யாருக்கும் தெரியாத ரகசியமான ஒரு விஷயத்தை காட்ட போறேன். செவ்வாய் கிரகத்தோட சிற்பத்துக்கு மேல என்ன செதுக்கி இருக்காங்கன்னு பாருங்களேன்! அது என்னவா இருக்கும்? அது ஒரு பிறை மாதிரி இருக்கு .அதுக்குள்ள ஒரு வட்டமும், அந்த வட்டத்துக்குள்ள ஒரு முகமும், செதுக்கப்பட்டிருக்கு. அந்த முகத்துக்குள்ள, கண்ணு, மூக்கு, வாய், எல்லாத்தயும் பாக்க முடியுது. நெத்தி ல இருக்குற புள்ளிய கூட பாக்கலாம். இது செவ்வாய் கிரகத்தோட சம்பந்தப்பட்ட ஒரு ரகசிய சின்னம் ( Symbol ).
இந்த கோவில்ல இது மாதிரி வினோதமா ஒளிஞ்சுகிட்டு இருக்கிற விஷயங்கள் நிறைய இருக்கு. வானத்துல இருக்கிற ஒவ்வொரு கோளோட சிற்பத்து மேலயும் ஒரு சின்னத்த (Symbol) செதுக்கி வச்சிருக்காங்க.
சூரியனோட சிற்பத்துக்கு மேல பாருங்களேன்! மறுபடியும் ஒரு விசித்திரமான கோலம் மாதிரியான pattern அ பாக்கலாம். இது, ஏதோ ஒரு கருவிக்குள்ள போட்டு வச்சிருக்கிற ஒரு சிக்கலான முடிச்சு மாதிரி இருக்கு. அதாவது அந்த முடிச்சில இருக்குற சிக்கல பாருங்களேன்! ரொம்ப புத்திசாலித்தனமா இருக்குல்ல? இந்த குறியீடு( symbol) சூரியனோட எந்த விதத்துல சம்பந்தப்பட்டிருக்கு?இதோட அர்த்தம் என்ன? சந்திரனுக்கு மேல பார்த்தோம்னா,
அங்க, மர்மமான ஒரு பறவ fancy யான சிறகுகளோட (றெக்கையோட) இருக்கு. இது என்ன பறவ? சந்திரனோட அதுக்கு என்ன சம்பந்தம்? புதனுக்கு மேலயும் இது மாதிரி ஒரு pattern இருக்கு. இந்த குறியீடுகள்( symbol )எல்லாம் எதக் குறிக்குது? கீழே செதுக்கி இருக்கிற அந்தந்த கிரகத்தோட, ஒவ்வொரு symbol உம் எப்படி சம்பந்தப்பட்ருக்கு?

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #hindu #hinduism #tamilnadu #astrology #astronomy

Комментарии

Информация по комментариям в разработке